கிரானைட் முறைகேடு வழக்குகள்: சகாயத்திடம் ஆவணங்களை ஒப்படைத்தார் மாவட்ட எஸ்பி

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சட்ட ஆணையர் சகாயத்திடம், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந் திர பிதாரி நேற்று ஒப்படைத்தார்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இவர், குவாரிகளில் நேரடி ஆய்வு செய்து 30-க்கும் அதிகமான துறை களிடம் ஆவணங்களைக் கேட்டுள் ளார். தூத்துக்குடி துறைமுகம், வேளாண்மை, மின் வாரியம், பதி வுத் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் ஏற்கெனவே ஆவணங்களை அளித்துவிட்டனர்.

இந்த நிலையில், காவல் துறை சார்பில் நேற்று ஆவணங்கள் அளிக்கப்பட்டன. கிரானைட் முறை கேடு, மிரட்டல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மதுரை மாவட்டக் காவல் துறையினர் 92 வழக்குகளை பதிவு செய்துள்ள னர். அவற்றின் விவரம், தற்போ தைய நிலை உட்பட பல்வேறு விவ ரங்களை சகாயம் கேட்டிருந்தார்.

இந்தப் புள்ளிவிவரங்கள் தனிப் படை மூலம் ஒரு மாதமாக சேகரிக் கப்பட்டன. அந்த விவரங்களை தாக்கல் செய்வதற்காக மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, கூடுதல் கண் காணிப்பாளர் ஜான்ரோஸ், குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் மணிரத்னம் ஆகியோர் நேற்று காலை சகாயம் அலுவலகத்துக்கு வந்து, பெட்டிகளில் கொண்டு வந்த ஆவணங்களை அவரிடம் ஒப் படைத்தனர். அப்போது, மக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சகாயம் அவர்களிடம் விவரம் கேட்டுள்ளார்.

பின்னர், விஜயேந்திர பிதாரி கூறும்போது, ‘வழக்கமான நடை முறைதான். குவாரி வழக்குகள் தொடர்பாக விசாரணை ஆணை யர் கேட்ட விவரங்களை அளித்துள்ளோம்’ என்றார்.

கொலை மிரட்டல் வழக்கு

சென்னையைச் சேர்ந்த கே.கஸ்தூரி ரங்கன் என்ற பெயரில், மார்ச் 9-ம் தேதியிட்டு சகாயத்துக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக, அவர் அளித்த புகாரின்பேரில், மதுரை தல்லா குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்