திருச்செந்தூர் கோயிலில் ஏப்.3-ல் பங்குனி உத்திரம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடந்து 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோயில் பந்தல் மண்டபம் முகப்புக்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோயிலை சேர்கிறார்கள். இரவில் கோயிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோயிலில் அதே நாளில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்