இடதுசாரி கட்சிகளை இணைப்பதே எங்கள் இலக்கு: இந்திய கம்யூ. பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி தகவல்

By செய்திப்பிரிவு

இடதுசாரி கட்சிகளை இணைப்பதே எங்கள் இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடந்த மாநாட்டு நிகழ்வில் தற்போதைய தேசிய கவுன்சில் குழுக் கூட்டம், புதிய தேசிய கவுன்சில் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்றன.

அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைப் பொதுச் செயலராக குருதாஸ் தாஸ்குப்தா வும், தேசிய செயலர்களாக ராஜா, சமீம் பெய்சி, அமர்ஜீத் கவுர், அதுல் குமார் அன்சான், ராமேந்திரகுமார், பானீயன் ரவீந்தி ரன், நாராயணா ஆகிய 7 பேர் தேர்வானார்கள்.

இதையடுத்து சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதா வது: கட்சி நிர்வாகிகள் தேர்வில் 20 சதவீதம் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த உள்ளோம். அனைத்து பிரிவிலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக இடதுசாரி கள் இணைந்து குரல் கொடுப் போம்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 14-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் என பலவிதமாக போராட்டத்தில் ஈடுபடுவோம். அத்துடன் நூறுநாள் வேலை திட்ட நாட்கள் குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம்.

வரும் டிசம்பர் 26-ம் தேதி கட்சியின் 90-வது ஆண்டு விழாவா கும். அதையொட்டி கட்சியை நடப்பாண்டில் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இடதுசாரிகள் இணைப்பு தொடர்பாக குரல் கொடுத்துள்ளோம். அதுவே எங்கள் இலக்கு ஆகும். இதர இடதுசாரி கட்சிகள்தான் இதுபற்றி பேசி முடிவு எடுக்க வேண்டும். இது உடனடி சாத்தியமில்லை, நீளமான பயணமாகும். அதற்கு போதிய காலஅவகாசம் தேவை என்று குறிப்பிட்டார்.

நேற்றையக் கூட்டத்தில் 31 பேர் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்

சுகாதாரத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.5 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் பட்ஜெட்டில் 30 சதவீத நிதி சுகாதாரத்தில் குறைக்கப் பட்டுள்ளது. சிரியா, பாலஸ்தீன மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. அதைத் தொடர்ந்து மாலையில் பேரணி, இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வானார். அவருடன் தேர்வான துணை பொதுச்செயலர் குருதாஸ் தாஸ் குப்தா, தேசிய செயலர்கள் ராஜா மற்றும் நிர்வாகிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்