கோவையில் அரசு சிமெண்ட் பதுக்கிய ஒப்பந்ததாரர் கைது

By செய்திப்பிரிவு

கேத்தி பேரூராட்சி கூட்டரங்கு கட்டுவதற்கு அரசு சிமெண்ட் பதுக்கிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். பதுக்கப்பட்ட 73 மூட்டை சிமெண்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் ரூ.22 லட்சம் செலவில் மன்ற கூட்டரங்கு கட்டுமானப் பணியை, குன்னூர் கரடிபள்ளத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் கீழ் கோத்தகிரி பகுதியில் இரண்டு பயனாளிகளிடமிருந்து அரசு சிமெண்ட் வாங்கி கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும், சிமெண்ட் மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாகவும் கேத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜான் மற்றும் ஊர் மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், நேற்று குன்னூர் வட்டாட்சியர் சிவகுமார், வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கேத்தியில் பேரூராட்சி குடோனை ஆய்வு செய்தனர். அங்கு 73 மூட்டை சிமெண்ட் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பதுக்கப்பட்ட சிமெண்ட்டை பறிமுதல் செய்த வட்டாட்சியர் சிவகுமார், கேத்தி காவல்நிலையத்தில் சம்பத்குமார் மீது புகார் அளித்தார். கேத்தி போலீஸார் சம்பத்குமாரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தொழில்நுட்பம்

57 mins ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்