பழங்குடிகள் மேம்பாட்டுக்கான கோரிக்கையை ஏற்காதது ஏமாற்றம்: ஆதிவாசி செயற்பாட்டாளர்கள் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக தாங்கள் தெரிவித்த யோசனைகளை தமிழக அரசின் பட்ஜெட்டில் சேர்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக ஆதிவாசிகள் உரிமைக்கான செயற்பாட்டாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து ஆதிவாசிகள் உரிமைக்கான செயற்பாட்டாளர் தனராஜ் கூறியதாவது:

தமிழக அரசின் பட்ஜெட்டில் பழங்குடி யினர் நலனுக்காக ரூ.657.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும். இது போதுமானதல்ல; குறைந்தபட்சம் 5 சதவீதமாவது ஒதுக்கியிருக்க வேண்டும்.

தமிழக பட்ஜெட்டில் பழங்குடியின மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இது போதுமானதில்லை. கர்நாடக அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பழங்குடியின மக்களுக்கு மாதம்தோறும் 30 முட்டை, 2 கிலோ பருப்பு, 3 கிலோ வெல்லம், 2 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இங்கேயும் அப்படி கொடுப்பதால் அரசுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படாது.

நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் முன்பாக இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் முன் வைக்கப்பட்டன. ஆனால், எதுவுமே கவனத்தில் கொள்ளப்படாதது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்