மூடிய தொழிற்சாலைகளை திறக்க கோரி ராணிப்பேட்டையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை ‘சிப்காட்’ பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள கழிவு தொட்டி ஜனவரி 31-ம் தேதி நள்ளிரவு உடைந்து 10 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து சிட்கோ கட்டுப்பாட்டில் இயங்கிய 79 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலையிழந்தனர்.

இந்நிலையில், ’சிட்கோ’ நுழைவு வாயில் அருகில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். தொழிற்சாலைகளைத் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

திடீர் சாலை மறியல்

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை நோக்கிச் சென்ற லாரி ஒன்றின் கண்ணாடியை அடித்து நொறுக்கி னர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். பின்னர், உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்