பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்

By செய்திப்பிரிவு

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இப்பணியில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகி றது. மொழிப்பாடங்கள் உட்பட குறிப்பிட்ட தேர்வுகள் நடந்து முடிந் துள்ளன. கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 18-ம் தேதி தொடங்க உள்ளன. வரும் 31-ம் தேதி அனைத்துத் தேர்வுகளும் முடிவடைகின்றன.

இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவ தும் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 66 கல்வி மாவட்டங் கள் உள்ளன.

ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் மாநிலம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 4 மையங் களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

40 ஆயிரம் ஆசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும் பணி யில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்தனர். மொழித்தாள், ஆங்கிலம் என அடுத்தடுத்து தேர்வுகள் முடிய, ஒவ்வொரு பாடத்தின் விடைத் தாள்களும் திருத்தப்படும்.

விடைத்தாளைப் பொருத்தவரை யில், அதன் முன்பக்கத்தில் (முகப்புச் சீட்டு) தேர்வெழுதிய மாணவரின் பெயர், பதிவு எண், புகைப்படம், ரகசிய குறியீடு ஆகியவை அச்சிடப்பட்டு இருக் கும்.

விடைத்தாள் மதிப்பீடு செய் யப்படுவதற்கு முன், முதலில் முகப்புச் சீட்டில் மாணவரின் பெயர், பதிவு எண், புகைப்படம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, ரகசிய குறியீடு கொண்ட பகுதி மட்டும் விடைத்தாளுடன் வழங்கப்படும்.

எனவே, விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தாங்கள் எந்த மாணவரின் விடைத் தாளை திருத்துகிறோம் என்பது தெரியாது.

விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், ரகசிய குறியீடு மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பதிவெண் அறியப் பட்டு ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்படும். விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்