அதிமுக ஆட்சியில் நீதியை எதிர்பார்க்கக் கூடாது: விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சியில் நீதியை எதிர்பார்க்கக்கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை விஜயகாந்த் வந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், பேரவைக்கு வெளியில் கருப்புத் துணியை கட்டியபடி தர்ணாவில் ஈடுபட்டிருந்த தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார்.

அப்போது அவர்களிடம், "அதிமுக ஆட்சியில் நீதியை எதிர்பார்க்கக்கூடாது. எழுந்து வாருங்கள் நாம் போகலாம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவை கைவிட்டு விஜயகாந்தோடு புறப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்| படம்: க.ஸ்ரீபரத்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், சபாநாயகர் தேமுதிக எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுவதாக நினைத்து வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார்.

இதுபோன்ற நிகழ்வு நாட்டில் வேறு எங்கும் நடைபெறாது. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக முதலமைச்சரே கூறுவது கண்டிக்கத்தக்கது" என்றார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்