வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.67 லட்சம் மோசடி: செயலர் கைது

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் ஜேசுதாசன் 2014-ம் ஆண்டு, சென்னை வணிகவியல் குற்றப் புலனாய்வுப்பிரிவு எஸ்.பி. பகலவனிடம் புகார் அளித்திருந்தார். அதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கம் செயல்படுகிறது.

இதில் செயலராக அறிவழகன்(44) பணிபுரிகிறார். அவர் 2012-13ல் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த தங்க நகைகளை வேறு வங்கியில் அடமானம் வைத்து, பணம் பெற்றுவிட்டு கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை வைத்து ரூ.16.16 லட்சம் மோசடி செய்துள்ளார்.

அதே போல், வங்கி இருப்புத் தொகையில் ரூ.90 ஆயிரம், நகைக் கடனில் ரூ.67 லட்சம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மோசடியைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் ஜேசுதாசன், கூட்டுறவு சங்கச் செயலர் அறிவழகனை சஸ்பெண்ட் செய்தார். இதுகுறித்து வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய அறிவழகன் மார்ச் 11-ம் தேதி மீண்டும் சங்கச் செயலராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து துணைப் பதிவாளர் ஜேசுதாசன் திண்டுக்கல் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து தனிப் படை போலீஸார் அறிவழகனை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

சினிமா

29 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்