மேகேதாட்டு அணைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதை திரும்பப் பெற கர்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே மேகேதாட் டுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளுக்காக கர்நாடக பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கியதை திரும்பப் பெற, அரசியல் அமைப்புச் சட்ட விதி 355-ன் படி மத்திய அரசு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியா ளர்களிடம் மேலும் கூறியதாவது:

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு பட்ஜெட் அறிக்கையில் சேர்த்தது சட்டவிரோத செயல். அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டத் தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநில ஆட்சி காங்கிரஸ் கையில் உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சோனியா காந்தி மூலம் கர்நாடக முதல்வரின் இந்த முயற்சியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழ்நாட்டில் காவிரிக்காக நடைபெறும் முழு அடைப்பில் பங்கேற்போம் என்பது தமிழக மக்களின் கவனத்தை திசைத் திருப்பி, தப்பித்துக் கொள்ளும் முயற்சியாகும்.

கர்நாடக அரசு பட்ஜெட்டில் அணைகள் கட்ட நிதி ஒதுக்கியதை கண்டித்தும், அரசியல் அமைப்புச் சட்ட விதி 355-ன் படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஏப்ரல் 4-ம் தேதி காலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம் பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றார் மணியரசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்