அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்

By செய்திப்பிரிவு

தமிழக அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காக காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னை, திருச்சியில் 10வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுடன் வீரமணி, பழனியப்பன், வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

9 கோரிக்கைகளில் பள்ளி, கல்லூரிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, வேலையில்லா பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.

இதனால், பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்