நாட்டில் 15.5 லட்சம் ஆதிவாசிகளுக்கு காட்டு நிலங்களில் பட்டா: தமிழகத்தில் இதுவரை ஒருவருக்குக் கூட தரவில்லை என புகார்

By குள.சண்முகசுந்தரம்

ஆதிவாசிகளுக்கான வன உரிமைச் சட்டம் 2006-ன் படி தமிழகத்தில் இதுவரை ஒருவருக்குக் கூட நிலம் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

காடுகளை பொத்திப் பாதுகாக்கும் ஆதிவாசி மக்களுக்கான வன உரிமைச் சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றியது. ஆதிவாசிகள் காட்டுக்குள் வாழ நினைக்கும் இடத்தில் அவர்களுக்கு வீடு கொடுத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். காட்டுக் குள் அவர்கள் விவசாயம் செய்யும் (அதிகபட்சம் பத்து ஏக்கர்) நிலத் துக்கு பட்டா கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இதில் உள்ளன.

அதன்படி இதுவரை நாடு முழுமைக்கும் 15,56,302 ஆதிவாசி களுக்கு 72,09,746 ஏக்கர் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத் தில் ஒருவருக்குக் கூட பட்டா வழங் கப்படவில்லை என்கிறார் ஆதிவாசி உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் வழக்கறிஞர் தனராஜ்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “தமிழகத்தில் சுமார் ஏழரை லட்சம் ஆதிவாசிகள் இருக் கிறார்கள். வன உரிமைச் சட்டத்தின் படி காடுகளுக்குள் ஆதிவாசி கிராமங்களின் கிராமசபை ஒப்புதல் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஆனால், தமிழகத்தில் ஆதிவாசி மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே சத்திய மங்கலம், கொடைக்கானல், மேக மலை ஆகிய மூன்று வன விலங்கு சரணாலயங்களை அண்மையில் அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

காடுகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்க நினைக்கும் வனத் துறையினர் வன உரிமைச் சட்டத் துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கள். ஓய்வுபெற்ற வனச்சரக அலுவலரான சாம்பசிவன் என் பவர், ‘காடுகளுக்குள் ஆதிவாசி மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதால் காடுகள் அழிக்கப்படும். எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சட்டத்தை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் ‘நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஆதிவாசிகளுக்கு நில பட்டா வழங்கலாம்’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், இதுவரை தமிழகத்தில் ஒருவருக்கும் பட்டா வழங்கப்படவில்லை.

தனிநபர் பட்டாவைத் தவிர கிழங்கு எடுத்தல், தேன் எடுத்தல் என தங்கள் இருப்பிடத்தைச் சுற்றி ஆதிவாசி மக்கள் தொழில் செய் யும் சுமார் 40 கி.மீ. சுற்றள வுக்கு அந்தந்த குழுக்களுக்கு சமுதாய பட்டா கொடுக்கவும் சட்டம் அனுமதிக்கிறது. தமிழகத் தில் இதுவும் ஒன்றுகூட கொடுக் கப்படவில்லை” என்றார்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “ஆதிவாசிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மாவட்டவாரியான லிஸ்ட் தரமுடி யும்” என்று சொன்னவர், மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்டு, “நிலம் கேட்டு இதுவரை 27,285 மனுக் கள் வரப்பெற்றுள்ளன. அதில் 3,841 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டன. 4,323 பேருக்கு பட்டா வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடி யாக இவர்களுக்கு பட்டா வழங்கப் பட்டுவிடும். எஞ்சிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளன’’ என்றார்.

இது தொடர்பாக மீண்டும் பேசிய தனராஜ், “அமைச்சர் சொல்வது முர ணாக இருக்கிறது. இது தொடர்பான அரசின் இணையத்தில் 2011-க்கு பிறகு வேறு புதிய பதிவுகள் ஏதும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணமாகச் சொல்பவர் கள், அரசு வழக்கறிஞரை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக் கிறார்களே” என்று ஆதங்கப்பட்டார்.

‘ஆதிவாசிகளுக்கு நில பட்டா வழங்கலாம்’ என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதுவரை தமிழகத்தில் ஒருவருக்கும் பட்டா வழங்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்