மாணவர்களின் பிரச்சினையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மாணவர்களின் பிரச்சினையை புரிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று தமாகா(மூ) தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

டி.டி. மருத்துவக் கல்லூரி மாண வர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும், வனக் கல்லூரி மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும், அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூ) சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

அப்போது கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழக மாணவர்களின் பிரச்சி னையை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். மாணவர்களின் பிரச்சினையை புரிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண் டும். அதற்கு தீர்வு அளிக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள், அவர்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கல்வி தற்போது வியாபாரம் ஆகிவிட்டது.

கல்விக் கூடங்களில் உட்கட்ட மைப்பு வசதிகள் செய்து கொடுக் கப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுகிற மாணவர்களை தாக்கு வதை கடுமையாக கண்டிக்கி றோம். தமாகாவில் கடந்த 15 நாட்களில் 35 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். நாங்கள் எப்போதும் மாணவர் சமுதாயத்துக்கு துணையாக இருப்போம். பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் மக்களுக்கு பலன் தராது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், யுவ ராஜா ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா இளைஞரணி மாற்றும் மாணவ ரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்