வண்டிகளுக்கு நிழற்குடை; வெயிலில் பயணிகள் - காஞ்சிபுரத்தில் பேருந்து நிறுத்தம் ஆக்கிரமிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில், இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால், பேருந் துக்கு காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காயவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் காமராஜர் சாலை யில் கடந்த ஆண்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. அந்த வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் உத்திரமேரூர் செல்லும் பேருந்துகள் அங்கு நின்று செல்லும்.

இந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்று வோரும், அவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்களது இரு சக்கர வாகனங்களை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்வதால், பயணிகள் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பேருந்துக்கு காத்திருக்கும்போது வேறு வழியின்றி பயணிகள் வெயிலில் காயவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

எனவே, பேருந்து நிறுத்தத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்கின்றனர் பயணிகள். இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரிடம் கேட்டபோது, ‘அங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

58 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்