தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியாருடன் புதுடெல்லியில் குடும்பத்தினர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியாரை புதுடெல்லியில் குடும்பத்தினர் சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஏ.எஸ்.எம்.அந்தோணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது தாயார் மரியதங்கம் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாருடன் உடன் பிறந்தவர்கள் ஆல்பர்ட் மனோகரன், எலிசபெத் ராணி, சகாய செல்வி, ஜான்ஜோசப் ஆகியோர்.

ஆசிரியரான ஆல்பர்ட் மனோகரன் தேவகோட்டையில் வசித்துவருகிறார். சகோதரி சகாயசெல்வியும் ஆசிரியை. இவர் சிவகங்கையில் வசித்து வருகிறார். தம்பி ஜான்ஜோசப் சென்னையில் பொறியாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஆப்கனில் தீவிரவாதிகளால் கடத் தப்பட்டபோது, அவரை மீட்டுத்தரக் கோரி தந்தை ஏ.எஸ்.எம்.அந்தோணி, சகோதரர் ஆல்பர்ட் மனோகரன், சகோதரி சகாயசெல்வி மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் மனு கொடுத்தனர். 8 மாதங்களாக பாதிரியாரின் வருகைக்காக குடும் பத்தினர் காத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் பாதிரியாரின் தந்தை அந்தோணிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அந்தோணிசாமி கூறியது: எனது தொலைபேசியில் பிரதமர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பேசினார்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட உங்கள் மகன் பாதுகாப்பாக விடு விக்கப்பட்டுள்ளார். பத்திரமாக தாயகம் திரும்புகிறார். நீங்கள் உங்களது மகனை சந்திக்கலாம் என பிரதமர் தெரிவித்தார் என்றார்.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் தந்தை அந்தோணிசாமி, மகள் எலிசபெத் ராணி, மகன் ஜான் ஜோசப் ஆகியோர் நேற்று இரவு புதுடெல்லி சென்றனர். அங்கு மகனை சந்தித்த மகிழ்ச்சியில் அந்தோணிசாமி கட்டித் தழுவினார். சகோதரி, சகோதரர் ஆகி யோரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்