சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்: மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட் டோர் நேரில் வந்து மாணவர் களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி மாணவர் கள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். நேற்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. காலை 10 மணி முதலே உயர் நீதிமன்ற வழக் கறிஞர்களும், மாணவர் அமைப் பினரும் வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அகில இந்திய மாண வர் பெருமன்ற மாநிலச் செயலா ளர் எஸ்.தினேஷ் போராட் டத்தை ஆதரித்துப் பேசினார்.

மதியம் 12.45 மணியளவில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எம்.வி.முருகதாஸ் மற்றும் பேராசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை எழுத்துபூர்வ மாக அளித்தால் அதை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வ தாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் மாணவர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், மாணவர்கள் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று உறுதியாக கூறிவிட்டனர். பின்னர், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி பிரசன்னா மற்றும் பெண் வக்கீல்கள் வந்து மாணவர் களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் வருகை

இந்த நிலையில், மதியம் 1 மணிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளு டன் வந்து மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மாணவ-மாணவிகள் மத்தியில் அவர் பேசும்போது, “இதே அதிமுக ஆட்சியில் 100 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்தபோது மாணவிகள் போராடினர். அப்போது அவர் களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்ததுபோல், சென்னை சட்டக் கல்லூரி இடமாற்ற பிரச்சினையிலும் ஆதரவு அளிக்கும்” என்றார்.

பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

பழமை வாய்ந்த சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற மாணவர் களின் கோரிக்கை நியாயமானது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களுடன் தமிழக அரசு உடனடி யாக பேச்சுவார்த்தை நடத்தியி ருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீ சார் தாக்கிய சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

காங்கிரஸ் ஆதரவு

அவரைத் தொடர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அங்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது:

கல்லூரி இடமாற்றம் என்பது தேவையில்லாதது. உயர் நீதிமன்றம் அருகே சட்டக் கல்லூரி இருந்தால்தான் இங்கு படிக்கின்ற மாணவர்கள் நீதிமன் றத்துக்கு சென்று வழக்கு விசாரணையை பார்த்து நேரடி அனுபவத்தைப் பெற முடியும். இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக என்ன செய்ய முடியுமோ அதை காங்கிரஸ் கட்சி செய்யும். உங்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று இளங்கோவன் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “இக்கல்லூரியை இடம் மாற்றுவது தவறான முடிவு. கட்டிடங்களில் பழுது இருந்தால் அவற்றை அவசர பணியாக கருதி சரிசெய்ய வேண்டும். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த வேண் டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மார்க்சிஸ்ட் ஆதரவு

பிற்பகல் 3 மணியளவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகி யோர் மாணவர்களைச் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்