சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது: 32-வது முறையாக விபத்து

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்தது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்து திறக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து விமான நிலையத்தில் கண் ணாடி, கிரானைட் கற்கள் உடைந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. இதுவரை விமான நிலையத்தில் 31 முறை கண்ணாடிகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுந்துள்ளன. தற்போது 32 வது முறையாக உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு நுழைவு வாயிலில் கேட் எண்.14ல் உள்ள கண்ணாடி கதவு (9 அடி உயரம், 4 அடி அகலம்) நேற்று உடைந்து விழுந்தது.

அந்த நேரத்தில் பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விமான நிலைய ஊழியர்கள், உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

ஓடிடி களம்

30 mins ago

க்ரைம்

48 mins ago

ஜோதிடம்

46 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்