மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக் சக்ரா’ விருது: மனைவி இந்து பெற்றுக்கொள்கிறார்

By செய்திப்பிரிவு

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வீர தீர செயலுக்கான ‘அசோக் சக்ரா’ விருது இன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் வீரத்தை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வீர தீர செயலுக்கான உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருதை அறிவித்தது. தற்போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவரிடம் இருந்து மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து இவ்விருதை பெற்றுக்கொள்கிறார்.

இது குறித்து முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் கூறும்போது, ‘‘நாட்டின் மிக உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ என்னுடைய மகனுக்கு கிடைப்பது பெருமையாக உள்ளது. ஆனால் அவன் இல்லாத சோகம் எங்கள் மனதில் இருந்து மறையவில்லை. முகுந்த் பணி யாற்றிய 44-வது ராஷ்ட்ரிய ரெஜிமேன்ட் படைப் பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் அவனைப் பற்றி உயர்வாக பேசுவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

நீரஜ் குமார் சிங்

தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வைகுந்த் முகுந்த ராஜனுடன் உயிரிழந்த நாயக் நீரஜ் குமார் சிங்குக்கும் அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

24 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்