தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: சன் டி.வி. ஊழியர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

தொலைபேசி இணைப்புகளில் முறைகேடு செய்ததாக தொடரப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன் மற்றும் சன் டி.வி. ஊழியர்கள் இருவரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது வீட்டில் 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டி.வி. முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கைது செய்யப் பட்ட 3 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி நேற்று விசாரித்து தீர்ப்பளித்தார். ‘‘இவ்வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கிறது.

பொதுமக்கள் நலனும் இவ்வழக்கில் அடங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட நிறுவனத் திலேயே வேலை செய்வதால், குற்றம் சாட்டப்பட்ட வேறு சிலர் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத் தலாம். அதனால், இவர்கள் சாட்சி களைக் கலைக்கக்கூடும். எனவே, இவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தர விட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

31 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்