ஜார்க்கண்டில் அமைதியாக முடிந்தது ஆதிவாசிகள் `பந்த்

By செய்திப்பிரிவு

போடோ தீவிரவாதிகளால் சமீபத்தில் ஆதிவாசிகள் பலர் கொல்லப்பட்டதை எதிர்த்து `ஆதிவாசிகள் செங்கெல் அபியான்' (ஏ.எஸ்.ஏ) எனும் அமைப்பு சார்பில் ஒருநாள் `பந்த்' ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைதியாக நடந்து முடிந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னால் போடோ தீவிரவாதிகளால் ஆதிவாசிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏ.எஸ்.ஏ. அமைப்பு அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

இதனை ஏற்று மேற்கண்ட மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஏ.எஸ்.ஏ. அமைப்பினர் ஊர்வலமாகச் சென்றதுடன் மாநில முதல்வர் தருண் கோகோயின் உருவ பொம்மையையும் எரித்தனர். அதேபோல மேற்கு வங்கத்தில் ஏ.எஸ்.ஏ. அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல்களிலும் ஈடுபட்டனர்.

எனினும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

7 mins ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

26 mins ago

ஆன்மிகம்

36 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

மேலும்