பிப்ரவரி 13-ல் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் ஸ்ரீரங்கம் உட்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது. 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஜன. 19-ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய 27-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மறுநாள் நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் ஆந்திராவின் திருப்பதி, மகாராஷ்டிராவின் முக்கீத், கோவா வின் பனாஜி, அருணாசலப் பிரதேசத்தின் லிரோமொபோ, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாகன்ச் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்