சான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

By செய்திப்பிரிவு

கடந்த 2012-13-ம் ஆண்டில் நடத்தப் பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அவற்றை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டனர்.

சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ் கள் மட்டும் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள் தேர்வெழுதிய மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரிடம் (சி.இ.ஓ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதிச்சான்றிதழை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யாதவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 14-ம் தேதி வரை அலுவலக வேலைநாட்களில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற்று, பதிவிறக்கம் செய் யாதவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 மதிப்பெண் வரை பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்