ஆதார் கார்டு கேட்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கு தனியார் காஸ் ஏஜென்சிகள் ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்பதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகாசி வழக்கறிஞர் ஆனந்த முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் மக்களின் அடை யாளத்துக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என பல அடையாள அட்டைகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக ஆதார் அடையாள அட்டையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இதையடுத்து, ஆதார் அடை யாள அட்டை கேட்க உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு தள்ளு படி செய்யப்பட்டது.

இந்நிலையில் காஸ் சிலிண்ட ருக்கான மானியம் பெற, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் சமர்ப்பிக்குமாறு இணைப்பு தாரர்களுக்கு தனியார் காஸ் ஏஜென்சிகள் குறுந்தகவல்கள் அனுப்புகின்றன. ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு இல்லாமல் பலர் உள்ளனர். அவர்கள் அரசின் மானியத்தைப் பெற முடியாது. மேலும், உச்ச நீதிமன்றம் ஏற்கெ னவே தடை விதித்துள்ள நிலை யில் காஸ் சிலிண்டர் பதிவு செய்ய ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு எண் கேட்பது சட்ட விரோதம்.

எனவே, காஸ் சிலிண்டர் பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு எண் கேட்கக் கூடாது, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு கேட்கும் ஏஜென்சிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி காஸ் சிலிண்டர் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் வி.தன பாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அமைச்சரவை செயலர், உள்துறைச் செயலர், மத்திய பெட்ரோலியத் துறை செயலர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத் தலைவர், தமிழக தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணை டிச.22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்