சாத்தூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி

By செய்திப்பிரிவு

சாத்தூர் அருகே உள்ள எட்டக்காபட்டியைச் சேர்ந்தவர் ஞானசேகரன், வெங்கடேஷ் பிரபு ஆகியோர் ஜி.வி. டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு மூலப் பொருளான அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தனர்.

இந்தத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை மெக்னீசியத்தை உருக்கியபோது தீ விபத்து ஏற்பட்டு வெங்கடேஷ் பிரபு, ஞானசேகரன், தொழிலாளர் கள் காளிமுத்து, சரவணன், மணிகண்டன், பெருமாள்சாமி, வேடிக்கை பார்த்த ராஜேஷ்கண் ணன் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து நேரிட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்த 7 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ்பிரபு, காளிமுத்து, பெருமாள்சாமி, மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்த அவர்களது குடும்பத்தினர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

தீக் காயமடைந்த தொழிற்சாலை யின் மற்றொரு உரிமையாளரான ஞானசேகரன், தொழிலாளர்கள் சரவணன் மற்றும் ராஜேஷ்கண்ணன் ஆகிய 3 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து நேரிட்ட தொழிற்சாலை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை யிலோ, மாவட்ட நிர்வாகத்திடமோ, தொழிற்சாலை துறையிலோ அனுமதி பெறவில்லை.

இருப்பினும் ஆபத்தான அலுமினிய பவுடர் தயாரித்த இந்தத் தொழிற் சாலையை அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தது பல கேள்விகளை எழுப்புகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்