ஆவின் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

By செய்திப்பிரிவு

ஆவின் பால் முறைகேடு தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் முறைகேட்டில் உள்ள பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி, இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டுமென கேட்டால், என் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அதிமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள குறை களையும், மக்கள் பிரச்சினை களையும், நான் சுட்டிக்காட்டவே கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.

பாலில் தண்ணீர் கலந்து, அந்த கலப்படப் பாலை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கிய வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி, மிகக் குறுகிய காலத்தில் செல்வந்தர்களாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வழக்கில் வைத்தியநாதனின் மனைவி குற்றவாளியாக சேர்க் கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முதல் ஆளும் கட்சி பிரமுகர்கள் வரை பலருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

6 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

30 mins ago

க்ரைம்

36 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்