வேலூர் தொகுதி தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என, அதிமுக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என, அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (சனிக்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது , ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுகவின், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்