சென்னை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தேர்வு: விண்ணப்பிப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

அகில இந்திய வானொலியின், சென்னை வானொலி நிலையத்தில், பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதிநேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

 

இது தொடர்பாக வெளியான அறிவிப்பு:

 

வயதுவரம்பு : சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசைகளான சென்னை 1, சென்னை 2 ஆகிய அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று 20 வயது முதல் 50 வயது வரைக்குள்ளாகவும், எஃப்எம் ரெயின்போ, எஃப்எம் கோல்டு அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும் 20 வயது முதல் 40 வயது வரைக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.

 

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பதாரர்கள், நல்ல குரல் வளமும், தெளிவான உச்சரிப்பும், ஒலிபரப்பில் ஆர்வமும், பொது அறிவுத்திறன் பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.

 

எழுத்துத்தேர்வு, குரல் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய மூன்றடுக்கு தேர்வு முறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பதாரர்கள் முதன்மை அலைவரிசை அல்லது, எஃப்எம் அலைவரிசை ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்பத்தை www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.300/-

 

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.225/-

 

விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.org என்ற இணையதளத்தில், online payment linkல்  click செய்து, State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees/Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டும் :

 

THE STATION DIRECTOR / நிலைய இயக்குநர்

 

PROGRAMME CO-ORDINATION SECTION / நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பிரிவு

 

ALL INDIA RADIO, KAMARAJAR SAALAI, MYLAPORE, CHENNAI – 600 004.

 

முழுமையான விவரங்களை www.airchennai.org என்ற இணையதளத்தையும், facebook.com/airchennai என்ற முகநூல் முகவரியையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்