சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும் பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத் தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன.

இதேபோல 6 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், 4 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 9 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 22 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 850 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் சித்தா, ஆயுர் வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோ பதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச் எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2017-2018 ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்படும்.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி யில் “இயக்குநர், இந்திய மருத்து வம் மற்றும் ஓமியோபதி, சென்னை-106 (Director of Indian Medicine and Homoeopathi, Chennai-106)” என்ற பெயரில் ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள லாம். அஞ்சல் மூலமும் விண்ணப் பம் பெறலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. அவர்கள் தங்களுடைய சாதி சான்றிதழ் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் நகலைக் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவைதவிர www.tn health.org என்ற இணையதளத் திலும் விண்ணப்பத்தை பதிவிறக் கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப் பத்துடன் தேவையான சான்றிதழ் களின் நகல்களையும் இணைத்து வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயே இந்த பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்