சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் சாலைகளை பராமரிக்காததால் அடிக்கடி விபத்து: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

By செய்திப்பிரிவு

நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங் களில் சாலை பராமரிக்கப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள் ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துக்களில் 17,218 பேர் இறந்துள்ளனர். இதில், 50 சதவீத விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் நடந் துள்ளன. நெடுஞ்சாலைகளில் போதிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளாததால் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4,974 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகளில் 2,724 கிமீ நீளச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்த முள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மூலமும் பராமரிக் கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிக ரித்து வருகிறது. ஆனால், கட்டணம் மட்டுமே வசூலிக்கும் சில சுங்கச் சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றன. இதனால், சில இடங் களில் சாலைகள் சிதலமடைந்து வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக பெரும்புதூர், வாலாஜாபாத், கிருஷ்ணகிரி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தேசிய நெடுஞ் சாலை பகுதிகள் சேதமடைந்திருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள் ளனர்.

மேலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத சம்பந்தப்பட்ட நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் கீழ் வரும் சாலைகளில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் வந்துள்ளன. விதிமுறைகள் பற்றி சில இடங்களில் தகவல் பலகைகள் வைக்கவில்லை, சுங்கச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைகளை தொடர்ந்து பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங் களாக ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 6 சுங்கச்சாவடி ஒப்பந்ததார்கள்மீது புகார்கள் வந்துள்ளன. சம்பந் தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பணிக்கு ஏற்றவாறு 30 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் உரிய பராமரிப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். இவ் வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நெடுஞ் சாலைகளை பராமரிக்க ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், சாலைகளைப் பராமரிப்பதில்லை. விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலையில் 400 பேரும், வாலாஜா கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 500 பேரும் விபத்துக்களில் இறந்துள்ளனர். சுங்கச் சாவடிகளில் முதலீட்டு செலவையும் கடந்து பல ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

குறிப்பாக, சில இடங்களில் திட்டம் விரிவாக்கம் என்ற பெயரில் தொடர்ந்து வசூலிக்கிறார்கள். முதலீட்டு செலவு மற்றும் லாபத்தைக் கடந்துவிட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த, அந்தந்த மாநில அரசுகளே ஆய்வு நடத்தி முடிவு எடுத்து வருகிறது. ஆனால், தமிழக அரசு தயங்குவது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

22 mins ago

சுற்றுலா

42 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்