ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம்

By செய்திப்பிரிவு

‘பவர் ஃபின்’ தலைவராக இருந்த வி.கே.ஜெயக்கொடி, ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு எரிசக்தி நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (பவர் ஃபின்) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த வி.கே.ஜெயக்கொடி மாற்றப்பட்டு, ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இப்பதவிகளை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கூடுதலாக கவனித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி நிதி மற்றும் கட் டமைப்பு தலைவர் பதவி, எரிசக்தித்துறை செயலர் விக்ரம் கபூருக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

58 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்