அன்று ஓபிஎஸ் 10 பேருடன் இயங்கியபோது சட்டப்பேரவையை எப்படி கூட்டினார்? - ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

இன்று 22 பேர் தனி அணியாக இயங்கும் போது பிளவு இல்லை சட்டமன்றத்தை கூட்ட முடியாது என்று கூறும் ஆளுநர் அன்று ஓபிஎஸ் 10 எம்.எல்.ஏக்களுடன் இயங்கிய போது ஏன் சட்டப்பேரவையை கூட்டினார் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அணி ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் இயங்கி வந்த நிலையில் இரு அணிகளும் இணைந்தது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தனி அணியாக இயங்குகின்றனர். இதில் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு அளித்தனர்.

22 பேர் ஆதரவை விலக்குவதால் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக சட்டபேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தினகரன் ஆதரவு தரப்பினர் முதல் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த திருமாவளவன், இடது சாரி கட்சித்தலைவர்களிடம் பேசிய ஆளுநர் அதிமுகவில் பிளவு இல்லை அதனால் சட்டபேரவையை கூட்டும் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஆளுநர் அப்படித்தான் சொல்வார். ஏனென்றால் இருவரையும் கையைப்பிடித்து ஒன்று சேர்த்து வைத்து மகிழ்ந்தவர் அல்லவா, அதனால் அப்படித்தான் பேசுவார்.

இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தனி அணியாக செயல்படும்போது அதிமுகவில் பிளவு இல்லை சட்டபேரவையை கூட்ட முடியாது என்று கூறுபவர் அன்று ஓபிஎஸ் 10 எம்.எல்.ஏக்களுடன் தனி அணியாக இருந்த போது சட்டபேரவையை எந்த அடிப்படையில் கூட்டினார், என்று கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்