மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது: நீர்வரத்து விநாடிக்கு 21,947 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியில் இருந்து நேற்று காலை 21,947 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது.

கடும் வறட்சி காரணமாக தமிழகத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணை, கடந்த ஆண்டு நிரம்பவில்லை. போதுமான அளவு நீர்வரத்து இல்லாமல் போனதால் கடந்த சில மாதங்களாக அணை வறண்டு குட்டை போல் காட்சியளித்தது. குறிப்பாக, மே மாதம் 21-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 19.65 அடியாக சரிவடைந்தது.

இந்நிலையில் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன்னர் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சுழித்து நுரைத்தபடி செந்நீராக மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து மேட்டூர் அணைக்கு வந்தபடி உள்ளது. இதனால் நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 21,947 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக மட்டுமே இருந்தது. நீர் வெளியேற்றத்தை விட, நீர்வரத்தின் அளவு பல மடங்கு அதிகரித்ததையடுத்து 2 நாளில் நீர் மட்டம் 6 அடி அதிகரித்தது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 50 அடியைத் தொட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை நீர்மட்டம் 63.75 அடியாக இருந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 21,947 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் 47 நாட்களில் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும். எனவே, இனிவரும் நாட்களைப் பொருத்தே இவ்வாண்டு அணை முழுக்கொள்ளவை எட்டுமா என்பதைக் கூற முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்