தமிழக அரசு அதிகாரிகள் 21 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி கள் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல, மாநில அதிகாரி களாக தேர்வானவர்களுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு, பதவி மூப்பு அடிப்படையில் மாநில அரசின் பரிந்துரையின் பேரில், மத்திய பணியாளர் நலத்துறை ஐஏஎஸ் அந்தஸ்து வழங்குகிறது.

இந்த அடிப்படையில், கடந்த 2014-ம் ஆண்டு காலியிடம் அடிப் படையில் சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் கவிதா ராமு, முதல்வர் அலுவலக துணைச் செயலாளர் ஏ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட 10 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2015-ம் ஆண்டில் முதல்வர் அலுவலக துணைச் செயலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆளுநர் மாளிகை துணைச் செயலர்கள் டி.மோகன், கே.வி.முரளிதரன் உள்ளிட்ட 9 பேர், 2016-ம் ஆண்டில், அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குநர் பி.ரமண சரஸ்வதி உள்ளிட்ட 2 பேர் என மொத்தம் 21 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்