அதிமுக அணிகள் இணைப்பில் சிக்கல்: தினகரன் கூட்டாளியான முதல்வர் பழனிசாமியுடன் எப்படி நம்பிக்கையுடன் இணைய முடியும்? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

By செய்திப்பிரிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் ஆடுகிறார். டி.டி.வி. தினகரனின் கூட்டாளியான அவருடன் எப்படி நம்பிக்கையுடன் இணைய முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி சார்பில், வண்ணாரப் பேட்டையில் மே தின பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங் கினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னயன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை மக்கள் இயக்க மாகவும், தொண்டர்கள் இயக்க மாகவும் வளர்த்தனர். ஆனால், ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சிக்கும் நிலை ஏற்பட்டது. அதிமுக எந்த லட்சியத்துக்காக தொடங்கப் பட்டதோ, அதை காப்பதற்காக தர்மயுத்தம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த கூட்டம் அதற்கு சாட்சியாக உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வேண் டும் என்றால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் தர்மயுத்தத்தின் முக்கிய நோக்கமாகும்,

முதல்வர் பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தில் சசிகலா, தினகரன் மற்றும் தனக்கு ஆதரவாக பிரமாண பத் திரத்தை பெற்றுள்ளார். தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறிய அவர்கள், அதன்பின் தினகர னுக்கு ஆதரவாக பிரமாண பத் திரம் பெற்றனர். அவரை எப்படி நம்பி இணைய முடியும்?

சேலத்தில் நடந்த கூட்டத்தில் நான் அந்தர் பல்டி அடித்ததாக பழனிசாமி கூறுகிறார். உண்மையில் பழனிசாமிதான் கபட நாடகம் அரங்கேற்றி வருகிறார். மக்கள் தற்போது ஏமாறவில்லை. பழனிசாமியை மக்கள் சரியான பாதைக்கு கொண்டு வருவார்கள். இல்லை என்றால் ஒதுக்கிவிடுவார்கள். இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம். ஒரு குடும்பத்தின் கையில் செல்ல அனுமதிக்க முடியாது. மீண்டும் மன்னராட்சி வர மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். டிடிவி தினகரனின் கூட்டாளி முதல்வர் பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது அதிமுக அணிகள் இணைப்பை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

19 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

33 mins ago

ஆன்மிகம்

43 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்