விஜயகாந்த்துக்கு 65-வது பிறந்தநாள்: வைகோ, தமிழிசை நேரில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்த நாளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மதிமுக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

கடந்த ஆண்டு வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விஜயகாந்துக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்தை சந்தித்த வைகோ, நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்