குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டுகள்: ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் உட்பட இருவர் நீதிமன்றத்தில் சரண்

By செய்திப்பிரிவு

மதுரையில் குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக் கப்பட்ட வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் உட்பட இருவர் மேலூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

மதுரை அண்ணாநகர் முதலா வது கிழக்கு பிரதான சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து நவம்பர் 10-ம் தேதி 11 நாட்டு வெடிகுண்டுகள் கண் டெடுக்கப்பட்டன. போலீஸார் விசாரணையில், ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்வதற்காக ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஆட்கள் சென்னையில் இருந்து வாங்கி வந்து, மதுரை இஸ்மாயில்புரத் தைச் சேர்ந்த கீரிமணியிடம் கொடுத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் அவை என்று தெரியவந்தது.

போலீஸார் தேடுவதை அறிந்த வரிச்சியூர் செல்வம், தனது கார் ஓட்டுநர் பார்த்திபனுடன் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்திலும், கீரிமணி என்ற மணிமாறன் விழுப்புரம் நீதிமன்றத் திலும் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.

இந்த நிலையில், வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் செந்தில் (34), அவரது நண்பர் சுப்பிரமணி (35) ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இருவரையும் நவ.15-ம் தேதி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும் நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்