கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.60 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உற்பத்தியாகும் தக்காளி வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகப் பகுதிகளில் இருந்து வரும் தக்காளியை விட, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் இருந்துதான் அதிக அளவில் வருகின்றனர். அப்பகுதிகளில் இருந்து வரத்து குறைந்துள்ள நிலையில், கடந்த வாரம் ரூ.45 ஆக இருந்த தக்காளி விலை, நேற்று ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: வட மாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநிலங்களில் போதுமான காய்கறிகள் விளையாது. அதனால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிச் செல்கின்றனர். தக்காளியைப் பொருத்தவரை கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில்தான் அதிக அளவில் விளைகின்றன. அதனால் வட மாநிலங்களில் இருந்து இந்த இரு மாநிலங்களுக்கு வந்து வியாபாரிகள் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்