குட்கா விற்பனைக்கு டிஜிபி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு: தனி விஜிலென்ஸ் ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By செய்திப்பிரிவு

குட்கா லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இதுவரை குற்றச்சாட்டு களுக்கு ஆளாகாத, உள்துறையைச் சாராத ஒருவரை விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், டிஜிபிக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு விதிமுறைப்படி நடந்துள்ளதால், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது.

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யவும், அவர் மீதான தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி யும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் நேற்று தீர்ப் பளித்தனர்.

அதில் நீதிபதிகள் கூறியிருப்ப தாவது: குட்கா லஞ்ச குற்றச்சாட்டில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப் பதால், இந்த வழக்கை உள் துறை செயலராகவும், மாநில விஜிலென்ஸ் ஆணையராகவும் இருப்பவர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. மாநில விஜிலென்ஸ் ஆணையத்தின் விசாரணை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்து வதாக இருக்க வேண்டும். தற்போது விஜிலென்ஸ் ஆணையராக உள் துறை செயலாளரே இருப்பதால் அவர் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக் காது.

2 வாரங்களில் நியமனம்

காவல்துறை உயர் அதிகாரி கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப் பட்டுள்ளதால் குட்கா லஞ்ச வழக்கை விசாரிப்பதற்காக தனி விஜிலென்ஸ் ஆணையரை தலைமைச் செயலர் 2 வாரங்களில் நியமிக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் விஜிலென்ஸ் ஆணையர், மாநில விஜிலென்ஸ் ஆணையத்தை சுதந்திரமாக வழி நடத்துபவராகவும், அச்சம், பார பட்சம் இல்லாமல் செயல்படு பவராகவும், அரசியல் நிர்பந்தங் களுக்கு பணியாதவராகவும் இருக்க வேண்டும்.

தனிப்படை அமைக்க வேண்டும்

இதுவரை எந்த குற்றச்சாட்டு களுக்கும் ஆளாகாமல், எந்த துறையுடனும் தொடர்பில்லாத, அதிலும் குறிப்பாக உள்துறையுடன் தொடர்பில்லாத, சட்டத்தை மட்டும் பின்பற்றக்கூடிய ஒருவரை விஜிலென்ஸ் ஆணையராக நிய மிக்க வேண்டும்.

குட்கா லஞ்சம் தொடர்பான வழக்கை விசாரிக்க லஞ்ச தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநர் தனிப்படை அமைக்க வேண்டும். இயக்குநர், விஜிலென்ஸ் ஆணையரின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண் டும். விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் விஜி லென்ஸ் ஆணையரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

விசாரணை விவரங்களையும், ஆவணங்களையும் வேறு யாருக்கும் அளிக்கக்கூடாது. முக்கியமாக இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் தலையீடு விசா ரணையில் இருக்கக்கூடாது. விசா ரணையை விஜிலென்ஸ் ஆணை யர் கண்காணிக்க வேண்டும்.

ஆவணங்கள் மாயம்

குட்கா லஞ்சம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், லஞ்ச தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரிடம் வருமான வரித் துறை வழங்க வேண்டும். அப்போதைய தலைமைச் செயலரிடம் வருமான வரித் துறை அளித்த ஆவணங்கள் மாயமானது தொடர்பாக விசாரித்து, அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள் ளனர்.

டிஜிபி பணி நீட்டிப்பு விதிப்படி நடந்துள்ளது

டிஜிபி நியமனம் விதிமுறைப்படி நடந்துள்ளதாக நீதிபதிகள் தெரி வித்துள்ளனர். இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘டி.கே.ராஜேந்திரனை டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு சரியாகவே உத்தரவிட்டுள்ளது. அவரது நியமனம் விதிப்படியே நடைபெற்றுள்ளது. குட்கா லஞ்சம் தொடர்பாக, குட்கா நிறுவன புரோக்கர் அளித்த வாக்குமூலத்தில் ராஜேந்திரனின் பெயர் எங்கும் இல்லை.

குட்கா லஞ்ச விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் டி.கே.ராஜேந்திரன் நியமனத்தை செல்லாது என அறிவிக்கப் போதுமானதாக இல்லை. குட்கா லஞ்ச வழக்கை லஞ்ச தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை என கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்