மீனவர்கள் 89 பேரை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை: ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவர்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 89 பேரை விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, 8 வெவ்வேறு சிறைப் பிடிப்புகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 89 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இம்மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை, காரைக் கால் மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் முதல்வர் பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி ஆகியோர் மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து கடிதங்கள் எழுதினர்.

மேலும் மத்திய அரசு வெளி யுறவுத்துறை மூலம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை கோரியதைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டுச் சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை கடி தத்தை இலங்கை சட்ட அமைச் சகம் நேற்று வழங்கியது. ஆனால், மீனவர்களின் படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. ஓரிரு நாட்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிற 31-ம் தேதி தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மீனவர்கள் கைது

இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். நெடுந்தீவு பகுதியில் விசைப்படகில் எம்.கணேசன், கே.வடிவேல், எம்.இருளாண்டி ஆகியோர் நேற்று மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது படகையும் சிறை பிடித்து காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணைக்குப் பின், மீனவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்