ஜிஎஸ்டியை எதிர்த்து ஆக.8-ல் கடையடைப்பு

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டியை எதிர்த்து ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டியால் வெற்றிலை முதல் மெழுகுவர்த்தி வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததுடன், சிறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. 160 நாடுகளில் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனால், இந்தியாவில்தான் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பைக் குறைக்கவும், எளிமைப்படுத்தக் கோரியும் வரும் 25-ம் தேதி சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவையிலும் கடையடைப்பு நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்