தமிழகம் முழுவதும் காவல் அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம்: 6 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

ஐபிஎஸ் உட்பட காவல் துறை அதிகாரிகள் 46 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையராக இருந்த பி.அரவிந்தன், தி.நகர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பதவியில் இருந்த பி.சரவணன், மயிலாப்பூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக இருந்த ரூபேஷ்குமார் மீனா, மதுரை சிவில் சப்ளை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பதவி வகித்து வந்த பி.சாமிநாதன் சென்னை பெருநகர காவல் போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாதவரம் துணை ஆணையராக இருந்த எஸ்.ராஜேந்திரன் கீழ்ப்பாக்கம் துணை ஆணைய ராகவும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த பிரவேஷ் குமார், திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும் திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பெருமாள், கோவை குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த கிங்ஸ்லின் சென்னை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் ஆக இருந்த வந்திதா பாண்டே, ஆவடி காவல் பயிற்சி மைய கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் காவல் அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் பயிற்சி முடித்து ஏஎஸ்பியாக இருந்து வந்த அரவிந்த் மேனன், சக்தி கணேசன், சர்வேஷ் ராஜ், சுகுணா சிங், கலைச்செல்வன், நாதா ஆகிய 6 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்