வியாபாரிகளின் குறைகளை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுவோம்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பேச்சு

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டியால் பொதுமக்க ளுக்கோ, வியாபாரிகளுக்கோ பாதிப்பு இருந்தால் அதனை மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல் வர் பழனிசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சியையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரம் வழியாக ஆரணி சென்றார்.

அவருக்கு காஞ்சிபுரம் பகுதி யில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையா, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், சார் ஆட்சி யர் அருண்தம்புராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதிமுக அம்மா அணி சார்பில் மாவட்ட செயலர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் கட்சியினர் வர வேற்பு அளித்தனர்.

அப்போது முதல்வர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஜிஎஸ்டியால் தமிழகத்தில் வியாபாரிகள் உட்பட யார் பாதிக் கப்பட்டாலும் அவர்களின் குறை களை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டி வரியைக் குறைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போக்குவரத்து நிறுத்தத்தால் அவதி

முதல்வர் வருகையையொட்டி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் போக்குவரத்தை தடை செய்தனர். சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். அவசர ஊர்தி ஒன்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக மக்கள் தெரிவித்தனர்.

முதல்வருக்கு அரசு அதிகாரி களும், அரசியல் கட்சியினரும் வரவேற்பு கொடுப்பதற்காக இதுபோல் போக்குவரத்தை தடை செய்வது தேவையற்றது என்று பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்