கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவியின் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு நிதியுதவி

By செய்திப்பிரிவு

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய கண்டுபிடிப்பு களை சந்தைப்படுத்த மத்திய அரசும், தேசிய அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் தொழில்முனை வோர் ஊக்குவிப்பு வாரியம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதன்படி, கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவி சந்தியா ராஜன், ஆசிரியர் ஜி.சுரேஷ் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானி டாக்டர் நவீன் வசிஸ்டா வழங்கியுள்ளார்.

2016-ம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்பு கள் மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முனையம் ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தொடங்கப் பட்டது. மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்த்து, ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, இளம் தொழில்முனைவோ ராக மாணவர்களை மாற்றுவதில் இந்த மையம் சிறப்பாகச் செயல்படுகிறது.

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே மத்திய அரசின் அங்கீகாரத்துடன் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண் பார்வை குறைபாடு உள்ளோர், தற்போது வெள்ளை நிற குச்சியைக் கொண்டு, தட்டிப் பார்த்து நடக்கின்றனர். தற்போது கண்டுபிடித்துள்ள கருவி, அல்ட்ராசானிக் சென்சார் மற்றும் நுண்ணிய புகைப்படக் கருவி மூலம், அருகில் உள்ள பொருளை அடையாளம் காண உதவுகிறது.

பாதையைக் கண்டறிய உதவும் இந்தக் கருவியை, வீட்டின் உள் பகுதி மற்றும் திறந்தவெளிப் பகுதி என இடத்துக்குத் தகுந்தாற்போல மாற்றி அமைத்தும் பயன்படுத்தலாம். இதன் மூலம், பார்வையற்றோர், மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல் இருக்கவும், அத்தியாவசியமான செயல்களைச் செய்யவும் உதவும் என்று கல்லூரி முதல்வர் டாக்டர் சுதா மோகன்ராம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்