சென்னையில் கவிஞர்கள் நினைவரங்கம்: வாலி, அப்துல் ரகுமான், நா.காமராசனுக்கு புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னையில் கவிஞர் வாலி கலை இலக்கியப் பேரவை சார்பில் கவிஞர்கள் நினைவரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமை தாங்கினார். அவர் பேசிய தாவது:

திரைப்படங்களில் கவிஞர் வாலியுடன் பணியாற்றியுள்ளேன். வாலியின் குடும்பத்தில் ஒருவ ராகவே இருந்தேன். மது அருந் தும் பழக்கம் உள்ள அவரிடம் ‘இனிமேல் மது அருந்தக்கூடாது’ என்று சத்தியம் வாங்கினேன். அதன்பிறகு எனக்கு மதிப்பளித்து கடைசி வரை அவர் மது அருந்தவே இல்லை.

சிறந்த கவிஞரான நா.காமராசன் எனது படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமான் மிகச்சிறந்த கவிஞர். ஆனால், திரைப்படத்துக்கு பாடல் எழுதியதே இல்லை. அது திரைத்துறைக்கு மாபெரும் இழப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் வாலி கலை இலக்கியப் பேரவை செயலாளர் பாரதி சங்கர் வரவேற் றார். திருச்சி கலை இலக்கியப் பேரவை செயலர் சிவகுருநாதன் தொகுத்து வழங்கினார்.

கவிஞர் வாலியின் படத்தை திறந்துவைத்து கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசினார். கவிக்கோ அப்துல் ரகுமானின் படத்தை கவிஞர் முத்துலிங்கம் திறந்துவைத்து, கவிஞர்களைப் பற்றி நினைவுகூர்ந்தார். கவிஞர் நா.காமராசனின் படத்தை திறந்து வைத்து கவிஞர் மு.மேத்தா பேசினார்.

‘அமுதசுரபி’ ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கவிஞர் வாலி கலை இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருண்பாரதி நன்றியுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

வணிகம்

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

மேலும்