திரையரங்குகள் வேலைநிறுத்த விவகாரம்: கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யும் - நடிகர் விஷால் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யும் என எதிர்பார்ப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். தமிழக திரையரங் குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. போராட் டத்தை கைவிட தயாரிப்பாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லை.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்றிரவு நடந்தது. இதில், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கூறியதாவது:

ஒரு படத்தின் திரையரங்கு ஓட்டம் என்பது 2 வாரங்கள்தான். அதற்கே பல பிரச்சினைகளை கடந்து வரவேண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சில படங்கள் வெளியாகியுள்ளன. 4-வது நாளிலேயே திரையரங்குகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜூலை 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்தால்கூட இந்தப் படங்கள் தப்பிக்கும். புதிய படங்களும் தள்ளிப்போட முடியும்.

திரையுலகில் அனைவருமே ஒரு குடும்பம். திரையரங்கு உரிமை யாளர்களிடம் மறுபடியும் கோரிக்கை வைக்கிறோம். 30 சத வீத கேளிக்கை வரி என்பது திரையரங்கு உரிமையாளர்க ளுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் களுக்கும் முக்கியமான பாதிப்பாக இருக்கப் போகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமே, கேளிக்கை வரி கிடையாது என்ற சந்தோஷமான தகவல் தமிழக அரசிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம். 58 சதவீத வரியை கொடுத்துவிட்டு தயாரிப் பாளர்களால் வாழவே முடியாது. வேறு எந்த மாநிலத் திலும் ஜிஎஸ்டியைத் தவிர எந்தவொரு வரியுமே இல்லை. கண்டிப்பாக தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யும் என எதிர்பார்க்கிறோம். இன்று நல்ல முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன்.

டிடிஹெச்-ல் படங்களை வெளி யிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர் களுக்கு வருவாயை எப்படி யெல்லாம் பெருக்குவது என்பது குறித்து பேசினோம்.

இவ்வாறு விஷால் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்