சென்னை - பெங்களூரு இடையிலான பிருந்தாவன் விரைவு ரயிலில் 8 பொது பெட்டிகள் திடீர் குறைப்பு

By செய்திப்பிரிவு

கூட்டநெரிசலால் பயணிகள் அவதி

சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் பிருந்தாவன் விரைவு ரயிலில் 8 பொதுப் பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டதால் தினமும் அந்த ரயிலை பயன்படுத்தி வரும் பயணிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பிருந்தா வன் என்ற (வண்டி எண்.12639) விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு பெங்களூருவை அடை யும். மறு மார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

இந்த ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன. இதில், குளிர் சாதன பெட்டியுடன் சேர்த்து 7 பெட்டிகள் முன்பதிவு பெட்டி களாகவும், மற்ற பெட்டிகள் பொதுப் பெட்டிகளாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி முதல் பிருந்தாவன் விரைவு ரயிலில் இருந்த 17 பொதுப் பெட்டிகளில் திடீரென 8 பெட்டிகள் குறைக்கப்பட்டு அவை முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுப் பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, இந்த ரயிலில் தினமும் பயணம் செய்து வரும் கிருபாகரன் என்ற பயணி கூறும் போது, ‘‘நான் வேலூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அரக்கோணத்தில் இருந்து பிருந்தாவன் விரைவு ரயிலில் காட்பாடிக்கு வேலைக்குச் சென்று வருகிறேன். இதேபோல், ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக் குச் செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென எவ் வித முன்னறிவிப்பும் இன்றி, 8 பொதுப் பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டதால் பொதுப் பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அவதிப்படு கின்றனர். மாதாந்திர பயணச் சீட்டை பயன்படுத்தி முன்பதிவு பெட்டி யில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே பயணி களின் நலன் கருதி கூடுதலாக பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும். அல்லது முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு கிருபாகரன் கூறினார்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இது குறித்து பயணிகளிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்