சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: சைதை துரைசாமி உட்பட 141 பேருக்கு வாய்ப்பு மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மேயர் சைதை துரைசாமி மற்றும் 140 கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சியில் விரி வாக்கப் பகுதிகள் இணைக்கப் பட்ட நிலையில் தற்போது 200 வார்டுகள் உள்ளன. கடந்த 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 168 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. மேயர் தேர்தலில் சைதை துரைசாமி வெற்றி பெற்றார். உள்ளாட்சி பொறுப்புகளுக்கான பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் அக்டோபர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை. அதிக வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி, மேயர் பதவியை கைப்பற்றும். அதற்கான மறைமுகத் தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதில், மேயர் சைதை துரைசாமி மற்றும் 140 கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சீமா பஷீர், எழிலரசி, சரவணன் உட்பட 27 முன்னாள் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் எம்பியும் வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான நா.பாலகங்கா, முன்னாள் எம்எல்ஏக் கள் கே.குப்பன், ஜே.சி.டி.பிரபாகர், கே.பி.கந்தன், வி.என்.பி.வெங்கட் ராமன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர் வேட்பாளர்களில் 7 பேர் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 7 பேர் வழக்கறிஞர்கள், 5 பேர் பொறியாளர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்