மக்களை அச்சுறுத்திய கரடி சிக்கியது: களக்காடு அருகே கூண்டுவைத்து பிடித்தது வனத்துறை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் களக் காடு அருகே வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் கரடி சிக்கியது. அதை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விடுவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத் தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் உள்ள குடியிருப்பு களிலும், விளைநிலங்களிலும் வனவிலங்குகள் புகுந்து நாசம் விளைவிப்பது தொடர்ந்து வருகி றது. கடந்த 19-ம் தேதி நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி பகுதிக்குள் கரடி புகுந்து மக்களை அச்சுறுத்தியது. அந்த கரடி தாக்கி 5 பேர் காயமடைந்தனர். அந்த கரடி இதுவரை பிடிக்கப்படவில்லை. அது எங்கு சென்றது என்பதும் தெரியாமல் உள்ளது.

களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத் தில் உள்ள விவசாய நிலங் களில் கரடிகள் கடந்த பல மாதங் களாக புகுந்து விவசாய விளை பொருட்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை வனத் துறையிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து விளைநிலங்களில் சுற்றித் திரிந்த கரடியைக் கூண்டுவைத்துப் பிடிக்க கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் முயற்சித்தனர்.

இந்நிலையில் நேற்று அதி காலை 3 மணியளவில் களக்காடு அருகே பிள்ளைகுளம் என்ற இடத்தில் ரமேஷ் என்பவர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் கரடி ஒன்று சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய கரடி தப்பிக்க முயற்சிக்கும்போது அதன் வாய், மூக்கு மற்றும் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கரடியை வனத்துறையினர் களக்காடு செங்கல் தேரி வனப் பகுதிக்கு கொண்டுச் சென்று விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்