காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று முதல் (ஜூன் 28) காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப் படும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்டத் திருத்தத்தில் ஆட்சே பணை இருந்தால் மனுவாக கொடுக் கலாம் என தலைமை நீதிபதி அறிவித்த பிறகும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி, 19 வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே, வழக்கறிஞர் கள் சங்கங்கள் அளிக்கும் கோரிக் கைகள் பரிசீலிக்கப்படும் வரை புதிய திருத்தம் அடிப்படையில் எந்த வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தலைமை நீதிபதி உறுதி அளித்திருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்தார். சென்னை உயர் நீதி மன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத் திலும் இதே கருத்து தெரிவிக் கப்பட்டது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிட்டு, வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம், அதன் துணைத் தலைவர் கினி இமானுவேல் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம். கடந்த 25-ம் தேதி தேனியில் நடந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

வழக்கறிஞர் சட்டப்பிரிவில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி இன்று (ஜூன் 28) முதல் அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவற்றை காலவரையின்றி புறக்கணிப்பது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, ஜூலை 1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் முன்பு கொடுமையான சட்டப்பிரிவை கொளுத்துவது, வழக்கறிஞர்களை பணி இடைநீக் கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலைக் கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

52 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்