22 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அவலம் - புதிய எம்எல்ஏ நடவடிக்கை எடுப்பாரா?

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1992-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,700 மனைகள் உருவாக்கப்பட்டன. இந்த மனைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது, இந்தக் குடியிருப்பில் ஆறாயிரம் வீடுகள் உள்ளன. இதில், 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பில் மேல்நிலைத் தொட்டி, சமூக நலக் கூடம், வணிக வளாகம், மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. நூலகம், தபால் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்மந்தப்பட்ட துறையினருக்கு இந்த இடங்கள் வழங்கப்படவில்லை.

இங்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, சமூகநலக் கூடம், வணிக வளாகம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை கடந்த 22 ஆண்டு களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் இல்லை, முறையாக பராமரிக்கவும் இல்லை. இதனால், இக்கட்டடங்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

பேருந்து நிலையம் அமைப் பதற்காக 32 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த இடம் புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ஆவடி தொகு திக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் க.பாண்டியராஜன் இப்பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர். 22 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தற்போது ஆவடி தொகுதியின் புதிய எம்எல்ஏ இப்பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தரணிதரன் கூறுகிறார்.

ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு இந்த ஏரி ஒரு முக்கிய நீர் ஆதாராமாக திகழ்ந்து வந்தது. தற்போது, இந்த ஏரி தூர்க்கப்பட்டு வீட்டுமனைகள் ஆனதால், பத்தடி இடைவெளியில் ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறுகள் அனைத்தும் 300 முதல் அடி 600 அடி வரை போடப்படுவதால். நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்